தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 September 2024

தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி.


தூத்துக்குடி மாவட்டம் : 04.09.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் உத்தரவின்படி காவல்துறை சார்பாக  போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்களிடம்  போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும் காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று  (04.09.2024) தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகள் ஏந்தி ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணி பள்ளியில் இருந்து துவங்கி திரேஸ்புரம் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad