தூத்துக்குடி - நீதிமன்ற விசாரணைக்காக தப்பிய கைதி - சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் கை முறிவு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

தூத்துக்குடி - நீதிமன்ற விசாரணைக்காக தப்பிய கைதி - சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் கை முறிவு.


தூத்துக்குடி - நீதிமன்ற விசாரணைக்காக தப்பிய கைதி - சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் கை முறிவு.


தூத்துக்குடி, ஆகஸ்ட்.01, சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா (30) என்பவர் விளாத்திகுளம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.


பின்னர் கடந்த 05.03.2024 அன்று தூத்துக்குடி பேரூரணியை சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக கைதி வழிக் காவல் மூலம் போலீசார் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்த போது மேற்படி ஐகோர்ட் மகாராஜா கைதி, வழிக்காவல் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.


இச்சம்பவம் தொடர்பாக  தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் வேல்குமார் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் காசி, காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன், கடம்பூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் வடபாகம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபெருமாள், தலைமைக் காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர் முத்தமிழ்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.


மேற்படி தனிப்படை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி விசாரணை கைதி ஐகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் கைது செய்ய முயற்சி செய்த போது மேற்படி கைதி போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


பின்னர் மேற்படி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கையில் கட்டுடன் நின்று கொண்டிருந்த மேற்படி நபர் ஐகோர்ட் மகாராஜாவை சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று தப்பிச் செல்லும் போது தூத்துக்குடியில் சாலை பணி நடைபெறும் பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு பின்னர் வைத்தியசாலையில் கட்டுபோட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து ஒரு அரிவாளையும் மேற்படி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைதி வழிக்காவலில் போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad