மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை.
தூத்துக்குடி மாவட்டம், ஜூலை.31, குலசேகரன்பட்டினம், மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு, தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு - இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு.
கடந்த 19.06.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (26) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் ராஜபுஷ்பத்தின் கணவரான, மணிநகர் பள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் நவீன்குமார் (32) என்பவரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் புலன் விசாரணை செய்து கடந்த 26.07.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாதவ ராமானுஜம் இன்று (31.07.2024) குற்றவாளியான நவீன்குமார் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனை ரூபாய் 2,000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 316 பிரிவின்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 1000/- அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment