கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 31 July 2024

கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு

 

IMG_20240731_164042_207

கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு.


தமிழ்நாடு, ஜூலை.31, திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3))  துறை நாள்.14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024, நாள்.25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும் பட்சத்தில்  அரசு கடிதம் எண்.15535/நவ4(3)/2019, நாள்.18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.       

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு 
இயக்குநர்,
நகர் ஊரமைப்பு இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad