நகை திருட்டு வழக்கு - ஏரல் குற்றவாளிக்கு குண்டாஸ்.
ஆறுமுகநேரி, ஜூன்.07, வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நடவடிக்கை.
கடந்த 04.05.2024 அன்று ஆறுமுகநேரி, அருகே காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் செல்வேந்திரன் (57) என்பவரது வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் ரூபாய் 45,000/- மதிப்புள்ள 1½ சவரன் தங்கநகையை திருடிய வழக்கில், ஏரல் சேதுக்குவாய்தான் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முகேஷ் (எ) சதீஷ் (24) என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சத்திய முகேஷ் (எ) சதீஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஏரல் சேதுக்குவாயத்தான் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முகேஷ் (எ) சதீஷ் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment