ஸ்ரீவைகுண்டம் - கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.
ஸ்ரீவைகுண்டம், ஜூன்.07, கடந்த 04.06.2024 ஸ்ரீவைகுண்டம், புதுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பாலமுருகன் (40) என்பவரது வீட்டின் முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த காசி என்பவரது மகன்கள் முத்துமகேஷ் (22) மற்றும் அவரது சகோதரர் சிவா (24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாலமுருகனின் வளர்ப்பு நாய் அவர்களை பார்த்து குரைத்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் மேற்படி நாய் மீது எறிந்த கல் பாலமுருகனின் வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து பாலமுருகனிடம் கேள்வி கேட்டபோது ஆத்திரமடைந்த முத்துமகேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரும் பாலமுருகனை தவறாக பேசி கல்லால் தாக்கியும், காலால் உதைத்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாலமுருகன் நேற்று அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரேணுகா வழக்கு பதிவு செய்து முத்துமகேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தார்.
மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment