மாசார்பட்டி - வீடு புகுந்து தங்க நகை திருடியவர் கைது - ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 7 June 2024

மாசார்பட்டி - வீடு புகுந்து தங்க நகை திருடியவர் கைது - ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை மீட்பு.

 

IMG_20240607_190222_513

மாசார்பட்டி - வீடு புகுந்து தங்க நகை திருடியவர் கைது - ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை மீட்பு.


மாசார்பட்டி, ஜூன்.07, மேலக்கரந்தை நடுத்தெருவை சேர்ந்த கார்த்திகைவேலன் மனைவி ஜெயந்தி (36) என்பவர் கடந்த 05.06.2024 அன்று காலை வீட்டை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எட்டையாபுரம் நடுவீர்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிச்செல்வம் (47) என்பவர் மேற்படி ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் வழக்கு பதிவு செய்து, மாரிசெல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார்.
மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad