புதுக்கோட்டை - கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 3 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 7 June 2024

புதுக்கோட்டை - கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 3 பேர் கைது.

IMG_20240607_190448_508

 புதுக்கோட்டை - கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 3 பேர் கைது.



தூத்துக்குடி, ஜூன்.07, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் நேற்று (06.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை அருகே குலையல்கரிசல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் குலையல்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த பூலோகபாண்டி மகன் இளையராஜா (34), பொன்சேகர் மகன் சுதாகர் (31) மற்றும் குலையன் கரிசல் பாண்டியாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அழகுபூபதி (28) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் நபர்களான இளையராஜா, சுபாகர் மற்றும் அழகுபூபதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad