கோடை விடுமுறை முடிந்து .. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பள்ளி திறப்பு .... மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு ......
தமிழகத்தில் இரண்டரை மாத கால கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ ,மாணவிகள் உற்சாகமாக பள்ளி களுக்கு வந்தனர். தங்கள் நண்பர்கள்,தோழிகளை சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, ரோஜா பூ வழங்கி வரவேற்றனர். திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை புரிந்தனர்.. பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் இனிப்பு வழங்கி வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷிபா ஜினி அமுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இறைவணக்கத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment