செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 40 வது முதலாம் ஆண்டு துவக்க விழா காலை 10 மணிக்கு இறை வழிபாட்டுடன் துவங்கியது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 12 June 2024

செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 40 வது முதலாம் ஆண்டு துவக்க விழா காலை 10 மணிக்கு இறை வழிபாட்டுடன் துவங்கியது.

photo_2024-06-12_20-48-30

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட அருட்தந்தை. லூர்துராஜ் திருவிருந்து ஆராதனையை நடத்தி வைத்தார், பின்பு கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் டாக்டர் எஸ் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார், அத்துடன் அவர் பேசுகையில் "வெற்றியாளர்கள் வித்தியாசமாக தங்கள் செயலை செய்வதில்லை, மாறாக வெற்றியாளர்கள் தாங்கள் செய்யும் செயலையே வித்தியாசமாக செய்வார்கள்" எனும் இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க தத்துவஞானி சிவகெரா - வின் தத்துவங்களை கூறி வாழ்த்துரை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட அருட்தந்தை. லூர்துராஜ் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயரம், நீளம், அகலம் எனும் பண்புடன் அதாவது இறைப் பற்றோடு, குடும்ப வளர்ச்சியும், அன்புடன் மனிதநேயம் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும் என்று காந்தியடிகளின் முப்பரிமாண வரிகளை மேற்கோள் காட்டி ஆசியுரை வழங்கினார்.


இந்நிகழ்வில் கல்லூரியில் பயின்று வரும் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழுடன் கேடயம் வழங்கி கௌரவித்தார், அதில் தற்போது நடைபெற்று முடிந்த அரசு தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும் கல்லூரியில் 2023 - 2024 ஆம் வருடத்திற்கான சிறந்த மாணவருக்கான விருது முஹம்மது நாசிரூதீன் மற்றும் மாணவியருக்கான விருது ஷெரீன் ராஷிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 


கல்லூரியில் பயின்று வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட 74 மாணவ மாணவியர்களுக்கும் விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது, முதலாம் ஆண்டு துறை விரிவுரையாளர் பாலின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துறைத் தலைவர் நாகராஜா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில், முதல்வர், துணை முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad