தமிழகத்தில் ....கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு....
உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளியில் சிறப்பு வழிபாடு...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் இரண்டரை மாத விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளி களுக்கு வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ மாணவியருக்கு ரோஜா பூ பென்சில் இனிப்பு கொடுத்தும் பூக்கள் தூவியும் வரவேற்றனர். தொடர்ந்து இறை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்கின. முதல் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளியில் இன்று திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment