திருச்செந்தூர் அருகே தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா......
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வரும், தாளாளருமான மீனா தலைமை தாங்கினார். மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி நிர்வாக அதிகாரி கண்ணபிரான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளி ஆலோசகர் ஆழ்வார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மழலைப் பள்ளி மாணவர்கள் 66 பேருக்கு தகுதி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் யூ கே ஜி முடித்த மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு செல்வதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment