நாசரேத் நூலக புதிய கட்டிடத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 17 September 2023

நாசரேத் நூலக புதிய கட்டிடத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அடிக்கல் நாட்டு விழா.

நாசரேத், நூலக புதிய கட்டிடத்திற்கு
தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அடிக்கல் நாட்டு விழா கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை  அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து  நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் உள்ள டேனியல் தெரு முதல் ஆசிர்வாதபுரம் பகுதி வரை புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமையில் அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன்  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகேயன், ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி, திமுக நாசரேத் பேரூராட்சித் தலைவர் நிர்மலா, துணைத்தலைவர் அருண்சாமுவேல், நாசரேத்
பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் எட்வர்ட் கண்ணப்பா, அனி சாலமோன், ரதி சந்திரன், ஜெயா, விஜிலா பால்ராஜ்,பெனிட்ரோ, அதிசயமணி, பத்திரகாளி, ஐஜினஸ், வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாகுட்டி, துணைத் தலைவர் கொம்பையா  மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆனால் இவ்விழாவில் நாசரேத் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது, முடிவில் நூலகர் பொன் ராதா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad