தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த எதிரி கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று (16.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முறப்பநாடு, பாறைக்காடு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் வைகுண்ட நாராயணன் (எ) நாராயணன் (25) என்பதும் அவர் மதுபோதையில் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி வைகுண்ட நாராயணன் (எ) நாராயணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி வைகுண்ட நாராயணன் (எ) நாராயணன் மீது ஏற்கனவே முறப்பநாடு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment