தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - ரூபாய் 21,000/- மதிப்புள்ள 33 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.
தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று (16.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு க்வாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த முகமது மகன் மொய்தீன் (40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி மொய்தீனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 21,015/- மதிப்புள்ள 33 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment