ஆட்டு வியாபாரி கொலை பன்னம்பாறை பகுதியில் சாலை மறியல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Sunday, 1 September 2024

ஆட்டு வியாபாரி கொலை பன்னம்பாறை பகுதியில் சாலை மறியல்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமான்குளம் வயல்வெளியில் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் நேற்று ஆக.31 அவர் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இன்று செப்.01,  காலை பனனம்பாறை பகுதியில் நாகர்கோவில் – திருச்செந்தூர் பிரதான தேசிய சாலையில் கொலை குற்றவாளியை கைது செய்ய வேண்டி வலியுறுத்தியும், இதில் உயிரிழந்த சுடலையின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இது தொடர்பாக‌ தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad