தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பெத்தானியா நகர் பகுதியில் அகிலன் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான 5.5 சென்ட் நிலத்தை மீட்டு தரும்படி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவின் உத்தரவுப்படி, ஏரல் தாலுகா சர்வேயர் நிலத்தை அளந்து பதிவு செய்தார். ஆயினும் மற்றொருவர் அதே இடத்தை, தனக்கு சொந்தமானது, என கூறி, எந்த ஒரு பத்திர அலுவலகத்திலும் பதிவு செய்ய படாத ஒரு போலி ஆவணம் மூலம் மேற்படி இடத்தின் அருகிலேயே வீடு கட்டி மேற்படி இடத்தையும் சேர்த்து வேலி அமைத்து ஆக்கிரமித்தும், செடி, கொடிகள் நட்டு அனுபவித்தும் வருகிறார்.
இதனால் பலமுறை அந்த இடத்தை காலி செய்ய சொல்லி கேட்டும், அவர் காலி செய்ய மறுத்து வருகிறார். இதனால் செய்வது அறியாத தவித்து வந்த அகிலன் பாஸ்கர், இது குறித்து உள்ளூர் காவல் துறைக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனக்கு என்னுடைய தந்தை வழியில் உரிமையாக கிடைத்தும் கூட்டு பட்டா மூலம் பதிவாகி இருக்கின்ற, என்னுடைய நிலத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரித்த சம்பந்த பட்ட காவல் துறையினர் விசாரணையில் திருப்தி இல்லாததால், மேல் நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசம் புகார் அளித்துள்ளார். அதன் படி நேற்று ஆக.31 அன்று மீண்டும் ஏரல் தாலுகா சர்வேயர் தலைமையிலான குழு மேற்படி இடத்தை அளந்து காட்டினர். ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் இடத்தை மீட்டு தர முடியவில்லை.
எனவே இது சம்பந்தமாக இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு மனுவை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment