தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 26 October 2023

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை.

.com/img/a/

நாசரேத் திருமண்டலத்தின் 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை விழாவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பேராயர்கள் தீமோத்தேயு ரவீந்தர், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.



திருநெல்வேலி, திருமண்டலத்தில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி நாசரேத் திருமண மண்டலம் 2003 ஆண்டு உதயமானது. அந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் கடந்த 10 நாட்களாக ஒவ்வோரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.


அதன்படி 24 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலையில் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் திருச்சபைகளின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

.com/img/a/

25 ஆம் தேதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஸ்தோத்திரப் பண்டிகை திருவிருந்து ஆராதனையுடன் துவங்கியது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் பொறுப்பும் பிரதம பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நடைபெற்றது. 


இந்த ஆராதனையில் மதுரை- இராமநாதபுரம் திருமண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தேவ செய்தி அளித்தார். காலை 11 மணிக்கு வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரதமப்பேராயரின் ஆணையாளர் தீமோத்தேயு ரவீந்தர் தலைமை வகித்தார்.  திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன், லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் வரவேற்றுப் பேசினார். 


விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 172 பேர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பேராயர்கள் தீமொத்தேயு ரவீந்தர், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் வழங்கினர். 

.com/img/a/

மேலும் திருமண்டல தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற வேத-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள், திருமண்டல கல்வி நிலையங்களில் கல்வி பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

சுற்று சூழல் கரிசனை துறை சார்பில் வந்திருந்த அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்க பட்டன.


விழாவில் நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் போதகர் ஹென்றி ஜீவானந்தம், உதவி குரு பொன்செல்வின் அசோக் குமார், திருமண்டல சபை மன்ற தலைவர்கள் வெல்ற்றன் ஜோசப், அகஸ்டின் கோயில்ராஜ், டேனியல் எட்வின், திருமண்டல தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திலுள்ள திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

இதற்கான ஏற்பாடுகளை திருமண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad