திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கொடி ஏற்றம். ஆழ்வார்திருநகரி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 August 2024

திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கொடி ஏற்றம். ஆழ்வார்திருநகரி.

ஆகஸ்ட் 31. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 8 வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் நேற்று கொடி ஏற்றம் நடந்தது. 

ஆண்டு தோறும் ஆவணி மாதம் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று காலை 4.30 மணிக்கு விஸ்வரூபம். 5 மணிக்கு திருமஞ்சனம். 6 மணிக்கு நித்தியல். 6.45 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடி மரம் அருகில் எழுந்தருளினார்.

7.30 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 8.10 மணிக்கு அர்ச்சகர் பாலாஜி  கொடியேற்றினார்.  பின்னர் கொடி மரம் பூஜை, தொடர்ந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம். அனுமன் வாகனம் சேஷ வாகனம் என ரத வீதியில் உலா, செப் 3 ந்தேதி செவ்வாய்க்கிழமை 5 ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. செப்  8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில்  அர்ச்சகர்கள் ரகு.  சீனிவாசன்.  ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி. சடகோபன் சுவாமி. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜம். கிரிதரன். ராம லட்சுமி. காளிமுத்து செந்தில்.நிர்வாக அதிகாரி சதீஷ்.  ஆய்வாளர் லோகநாயகி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஊர் தலைவர் கிருஷ்ணன். உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad