பைக் மீது லாரி மோதி விபத்து வாலிபர் பலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 August 2024

பைக் மீது லாரி மோதி விபத்து வாலிபர் பலி.

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக காளிராஜ் இவரது மகன் கலைச்செல்வன் (29), இவர் சம்பவத்தன்று தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேப்பலோடை அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த கலைச்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் மீது மோதிய லாரியை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad