நாசரேத் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 May 2026

நாசரேத் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா.

நாசரேத் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா 

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. நாசரேத் 

தூய யோவான் பேராலய ஆயர் ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளர் மாமல்லன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்புரை ஆற்றினார்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி குருவானவர் தாமஸ் தலைமை தாங்கி கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றை தொகுத்து கூறி கல்லூரி ஆண்டு மலரை ஜெபித்து வெளியிட்டார். 

திருமண்டல பொருளாளர் ஜான்சன் மற்றும் சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் மற்றும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்கள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. 

கல்லூரியில் இருபத்தைந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளர்கள் செல்வன், ராஜேஷ், ராஜன், ஜெபசீலன், தனசிங், ஜூலியட், சரஸ்வதி ஆகியோரை பாராட்டி கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழா முடிவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பினர்கள், நாசரேத் சேகர மன்ற உறுப்பினர்கள், பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் அருள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் 
கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad