சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் 237 மாணவ மாணவியர்களுக்கு பணி ஆணை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 May 2026

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் 237 மாணவ மாணவியர்களுக்கு பணி ஆணை.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் 237 மாணவ மாணவியர்களுக்கு பணி ஆணை.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்கள் இருந்து நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ந.ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை வகித்தார். 

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நேர்காணலில் பெசன்ட் டெக்னாலஜி, ஃபாக்ஸ் கான், யுனிடெக் ப்ளாஸ்ட்ரோலிட் லிமிடெட், மதர் சன், டாட்டா எலக்ட்ரானிக்ஸ், சாய் பவர், வெபாரக்ஸ், ரோரி டெக்னாலஜிஸ், மெச்சுபா, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருந்து நேர்காணல் நடைபெற்றது. 

இதில் மாணவ மாணவிகள் உற்சாகமாக நேர்காணலில் கலந்து கொண்டு பணி ஆணை பெற்றனர். கல்லூரி ஆர்வலர் தீபக்ராஜ் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

ஏற்பாட்டினை பிளேஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் கட்டிடவியல் துறை தலைவர் ஜாக்சன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad