ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 December 2024

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்துவது வழக்கம்.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கால்நடைத் துறையின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரத சாகு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1. மாவட்ட ஆட்சியர்களிடம் இடம், நேரம் குறிப்பிட்டு அனுமதி பெறாத ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

2. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

3. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையை தரக் கூடாது.

4. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முன்னதாக, பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசின் www.jallikattu.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமே ஜல்லிக்கட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

6. ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

Post Top Ad