தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா நடந்தது.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியின் 143 வது பிறந்தநாள் விழாவில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டையாபுரத்தில் உள்ள நினைவு மணி மண்டபம், பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம்,முன்னாள் நூலகர் பூல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் கலந்து கொண்டு பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின் கல்லூரி மாணவர்களிடம் பாரதியின் புகழ் குறித்து பேசினார்.
இதில் கோவில்பட்டி நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர் நடராஜன்,சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்கள் மற்றும்
No comments:
Post a Comment