தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்குகோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் 143 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியின் வேடம் புணைந்து 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திடவும், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பிற்கு பாடுபடவும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்,
பின் இளம் பாரதிகள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பாரதியின் பாடல்களை பாடி வந்தேமாதரம் கோஷமிட்டு பள்ளி முன்பிருந்து துவங்கி மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
பல்வேறு கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இராஜையா தலைமை வகித்தார். கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், இனாம்மணியாச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ஜெயராணி அனைவரையும் வரவேற்றார்,
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment