நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப கிறிஸ்துமஸ் ஐக்கிய கூடுகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப கிறிஸ்துமஸ் ஐக்கிய கூடுகை.

 நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா 18.12.2024 மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஓய்வு பெற்ற குருவானவர் அருட்திரு.தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஆஷா ஜேம்ஸ் வேத பாடம் வாசித்தார். ஓய்.எம்.சி.ஏ தலைவர் எபனேசர் வரவேற்புரை வழங்கினார்.

தொழிலதிபர் கெர்சோம், ஓய்.எம்.சி.ஏ நெல்லை மண்டல துணை செயலர் பொன்ராஜ், மர்காஸ்சியஸ் மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங், மூக்குபீறி ஏக இரட்சகர் சபை தலைவர் மத்தேயு, பொறியாளர் ரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கிறிஸ்து பிறந்த திருநாளை கொண்டாடும் விதமாக நாசரேத், தூய யோவான் பேராலய பெண்கள் பாடல் குழுவினர் மற்றும் ஓய்.எம்.சி.ஏ அங்கத்தினர் சிறப்பு பாடல்களை பாடினர். 

தொடர்ந்து நாசரேத் சேகர குருவானவர் அருட்திரு. ஹென்றி ஜீவானந்தம் கலந்து கொண்டு திருமறை பகுதியில் இருந்து சிமியோன் வாழ்க்கை பற்றி எடுத்துரைத்து ஆசியுரை வழங்கினார். 

இந்நிகழச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குருவானவர்கள் அருட்திரு. பொன் செல்வன் அசோக் குமார் மற்றும் நாசரேத் பேராலய உதவி குருமார்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நாசரேத், நல்ல சமாரியன் மன நலம் குன்றியோர் இல்லம், திருமறையூர் காது கேளாதோர் பள்ளி,  மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, கல்வாரி சேப்பல் டிரஸ்ட், முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு நலத்திட்ட உதவிகளை ஓய்.எம்.சி.ஏ நிர்வாகத்தினர் சார்பில் வழங்கினர்.

இந்நிகழ்வில் ஓய்.எம்.சி.ஏ செயலர் சாமுவேல், ஆர்ம்ஸ்ட்ராங், புஷ்பராஜ், ஜட்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். லேவி அசோக் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

திருமறையூர் சேகர தலைவர் அருட்திரு.ஜான் சாமுவேல் நிறைவு ஜெபம் செய்ய விருந்து உபசரணையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad