தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சுதேசி நாயகன் த.வெள்ளையன் நூறாவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள், அதனை தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் நட்டனர். பின்பு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில பொதுசெயலாளர், தூத்துக்குடி மாவட்ட தலைவர், மற்றும் மதுரை மாவட்ட தலைவர், மதுரை மாவட்ட துணை தலைவர், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் செய்திருந்தனர்.
#தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.
No comments:
Post a Comment