ஏரல் தாலுகா, முக்காணி ஆற்றுப்பாலத்தில் கட்டப்பட்டிருந்த உயர்மட்ட பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பழுதடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாதபடி நிலையில் உள்ளது. இந்நிலையில் அந்த பாலம் பழுதடைந்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுநாள் வரையில் அந்த பாலத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து முக்காணி ஆற்றுபாலத்திற்கு ஏரல் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட பொதுசெயலாளர் சத்தியசீலன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக சித்ராங்கதன் மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன் ஸ்ரீவைராஜா மாவட்டச் செயலாளர்கள் வீரமணி ஸ்ரீவை சங்கர் பாலாஜி வாரியார் லிங்கராஜ் மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ் தங்கம் ஏரல் ஒன்றிய இளைஞரணி தலைவர் கன்னிராஜா ஒன்றிய செயலாளர் செந்தில் கிளைத்தலைவர்கள் அழகேசன் மாசானம் ராஜ் செந்தில்குமார் முருகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொன்டார்கள்.
முன்னதாக (டிசம்பர் 19) இன்று காலை, பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமையில் முக்காணியில் இருந்து ஆத்தூர் பாலம் நோக்கி மலர் வளையம் கொண்டு ஊர்வலமாக பாலத்தை நோக்கி சென்றனர்.
பாதி வழியிலே காவல் துறை ஊர்வலத்தை தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது, அதன் பின்னே சிலர் தொண்டர்கள் மலர் வளையம் கொண்டு ஆற்று பாலத்தை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களை வழியிலே காவல் துறையினர் மறித்ததால் மீண்டும் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
குறிப்பு: முக்காணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஆத்தூர் பாலத்திற்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சுவரொட்டி பாஜக வினர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
#தூத்துக்குடி #ஏரல் # தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
No comments:
Post a Comment