திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
(1)திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும். 

 (2) ஒரு நாளைக்கு 14 தடவை மூடி திறக்கும் ஆறுமுகநேரி ரயில்வே கேட் - ஆல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வேண்டும். 

(3) கூடுதல் ரயில் பெட்டிகள் நிற்பதற்கு வசதியாக திருச்செந்தூர் ரயில் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்து தரவேண்டி ரயில்வே நிர்வாகத்தை கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள் அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் வருகிற 2025 ஜனவரி முன்றாம் தேதி ரயில் மறியல் செய்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில், ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக் குழு தங்கமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இ.அமிர்தராஜ், பி எஸ் முருகன், விடுதலை சிறுத்தை கட்சி விடுதலை செழியன், ராஜ்குமார் ராஜ், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், ஜெயகுமார், சிபிஐ எம் தமிழ் செல்வன், அமமுக தனசேகர்,  அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சுரேஷ் பாபு, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார், குருசாமி, 

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன், முனியாண்டி, பழம் பொருள், மாவட்ட அமைப்பாளர் சசிக்குமார், நாடார் வியாபாரிகள் சங்கம் துணை தலைவர் முருகன், துணைச் செயலாளர் சத்யசீலன், பாலமுருகன், தங்க குமார், முத்துராஜ், ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், 

எம்.எல்.எப் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, இந்துமுன்னணி நகர செயலாளர் ஜி.ராமசாமி, லயன்ஸ் சீனிவாசன் மற்றும் திரளான வணிகர்கள் ‌பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்பாட்ட கோரிக்கை கோஷம் எழுப்பினர். முடிவில் நாடார் வியாபாரிகள் சங்கம் துணை தலைவர் பால்வண்ணன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad