சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி திருச்செந்தூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி திருச்செந்தூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

சமூக விரோதிகள் மீது நடவடிக்கை கோரி திருச்செந்தூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பெயர் பலகையை சேதப்படுத்தியும், உறுப்பினர்களையும் அச்சுறுத்தும் வண்ணமாக செயல்படும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி. ஜெயக்குமார் தலைமை வகித்து கண்டன உரையை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் ரவி சந்தர் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad