தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் அனைத்து வணிகர் முன்னேற்ற சங்கம் துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பவானி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் கோடீஸ்வரன் கலந்து கொண்டு புதிய சங்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் காத்தவராயன், செயலாளர் அருண்குமார், பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை எந்த சூழ்நிலையிலும் நாம் விற்பனை செய்யக்கூடாது, சங்க உறுப்பினர்களுக்கு எந்த நேரத்திலும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சங்கம் துணை நிற்கும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கப்பட்டன.
விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் என்.சுரேஷ், சங்க நிர்வாகிகள் ஷேக் முகமது, முத்துக்குமார், மனோகர் ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரன் நன்றி கூறினார்.
.தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment