திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  தலைவர் ரெ. காமராசு நாடார் விடுத்துள்ள அறிக்கையில், நாளை 18ந்தேதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கமும், ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக் குழுவும் இணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 

(1)திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும். 

 (2) ஒரு நாளைக்கு 14 தடவை மூடி திறக்கும் ஆறுமுகநேரி ரயில்வே கேட் - ஆல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வேண்டும். 

(3) கூடுதல் ரயில் பெட்டிகள் நிற்பதற்கு வசதியாக திருச்செந்தூர் ரயில் நிலையத்தை  போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்து தரவேண்டி ரயில்வே நிர்வாகத்தை கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 
வணிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் திறளாக கலந்து நமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப்போம் அனைவரும் வாரீர் என கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad