கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவிதா குடிசை தொழிலகத்தில் இயேசு, மாதா சொரூபம்(சுய உருவம்) விற்பனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 December 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவிதா குடிசை தொழிலகத்தில் இயேசு, மாதா சொரூபம்(சுய உருவம்) விற்பனை.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கவிதா குடிசை தொழிலகத்தில் இயேசு, மாதா சொரூபம்(சுய உருவம்) விற்பனை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி.

திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கவிதா சுய உருவ வேலை குடிசைத் தொழிலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு, மாதா, அந்தோனியார், சூசையப்பர் உள்ளிட்ட சொரூபங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீடுகளில் அமைக்கும் குடில்களில் வைக்க கூடிய சொரூபங்கள் பியோபி மாவு, சிமெண்ட் பைவர் மூலம் தயாரிக்கப்படுகிறது. 

இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி புதுவை, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வடமாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்ப படுகிறது. சிற்பக் கலைஞர் கதிரவன், டிராவிட் ஆகியோரின் முன்னிலையில் தொழிலாளர்கள் சொரூபம்(சுய உருவம்) தயாரித்து வருகின்றனர்.  

தமிழக குரல் செய்திகளுக்காக m
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad