வெள்ளாளன்விளையில் ஆண்கள் கபடி போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 December 2024

வெள்ளாளன்விளையில் ஆண்கள் கபடி போட்டி.

துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி
வெள்ளாளன்விளையில் ஆண்கள் கபடி போட்டி
மாலை பரிசளிப்பு விழாவில் நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. 

இதில் ஆழ்வார் யூனியன் - திருவைகுண்டம் யூனியன் அணியினருக்கான போட்டியை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், உதவி செயலர் சசிகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தார். 
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 12 யூனியன் அணியினர் கலந்து கொண்டுள்ளனர். 

வெற்றி பெறும்அணிகளுக்கான பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை தொழிலதிபர் பெப்சி பாலமுரளி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திமுக மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஜெசி பொன் ராணி, திமுக மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் வெள்ளாளன்விளை ராஜேஷ் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad