அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 து ஆண்டு விழா மற்றும் புத்தாடை வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 December 2024

அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 து ஆண்டு விழா மற்றும் புத்தாடை வழங்கும் விழா.

அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 து ஆண்டு விழா மற்றும் புத்தாடை வழங்கும் விழா.

நாசரேத் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் இல்லத்தில் இன்று 08.12.2024 காலை 11.00 மணிக்கு அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு வழங்கும் விழா நடைபெற்றது.

பிரகாசபுரம் பங்குத்தந்தை அருட்பணி. சலேட் ஜெரால்ட் அடிகளார் தலைமை தாங்கினார்.

நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெர்வின் தூத்துக்குடி ஜெகன் மற்றும் நாசரேத் 3வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ் முன்னிலை வகித்தனர்.

ஆர்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் ஸ்னோ ரியல் எஸ்டேட் உரிமையாளர் இருதய ஞான ரமேஷ் கலந்துகொண்டு 95 மாணவ மாணவியருக்கு புத்தாடை வழங்கினார்கள்.

இவ்விழாவில் நாசரேத் ரூபன் டைல்ஸ் உரிமையாளர் சகாய ரூபன் தொழிலதிபர் எஸ் டி ஆர் சாமுவேல் மற்றும் சமூக ஆர்வலர் விஜய் ஆனந்த் என பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.   

பரணி பிராய்லர்ஸ் உரிமையாளர் தோழர் கிருஷ்ணராஜ் மரியின் ஊழியர் சபை அருட் சகோதரிகள் ஹெலன் மற்றும் இன்ஃபெண்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அன்னை தெரசா தொண்டு நிறுவன செயலாளர் காட்வின் அலெக்ஸ் ராஜா நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவனத் தலைவர் அந்தோணி ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad