உதயநிதி பிறந்தவிழா கபடி போட்டி விளாத்திகுளம் அணி சாம்பியன். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 December 2024

உதயநிதி பிறந்தவிழா கபடி போட்டி விளாத்திகுளம் அணி சாம்பியன்.

துணைமுதல்வர் உதயநிதி பிறந்தவிழா கபடி போட்டி விளாத்திகுளம் அணி சாம்பியன் தொழிலதிபர் பெப்சி பாலமுரளி வெற்றிக் கோப்பையை வழங்கினார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு , மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 12 யூனியன் அணியினர் கலந்து கொண்டன. இறுதி போட்டி யில் திருச்செந்தூர் அணியை வீழ்த்தி விளாத்திகுளம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை திருச்செந்தூர் யூனியன் அணியும் 3வது இடத்தை ஆழ்வார் திருநகரி யூனியன் அணி பிடித்தது. வெற்றி பெற அணிகளுக்கு சென்னை தொழிலதிபர் பெப்சி பாலமுரளி வெற்றிக் கோப்பையை வழங்கினார். 

இதில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலாக நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இநிகழ்ச்சியில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, திமுக மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் வெள்ளாளன்விளை ராஜேஷ், பஞ்சாயத்து தலைவர் ராஜரத்தினம், தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், உதவி செயலர் சசிகுமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad