தூத்துக்குடிக்கு கன்னியாகுமரி, உடன்குடி போன்ற பகுதியில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர் மழையின் காரணமாக தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் தேங்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் விலை தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!தேங்காய் விலை இரு மடங்காக உயர்வு!!
No comments:
Post a Comment