திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த.... பாகனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.... தொழிலதிபர் பெப்சி பாலமுரளி வழங்கினார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 December 2024

திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த.... பாகனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.... தொழிலதிபர் பெப்சி பாலமுரளி வழங்கினார்

திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த.... பாகனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.... தொழிலதிபர் பெப்சி பாலமுரளி வழங்கினார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயகுமார், உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் பாகன் உதயகுமாரின் மனைவி ரம்யாவிற்கு அரசு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கனிமொழி எம்பி இதனை வழங்கினார். இந்நிலையில் உயிரிழந்த பாகன் உதயகுமாரின் இல்லத்திற்கு உடன்குடி ஒன்றியம் நைனார்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான வி. எஸ். பெப்சி பாலமுரளி சென்று உதயகுமாரின் மனைவி ரம்யாவுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஆர் கோட்டாளம் , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பொன். முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad