தூத்துக்குடியில் காசநோய் ஒழிப்பு - 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 December 2024

தூத்துக்குடியில் காசநோய் ஒழிப்பு - 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (07.12.2024) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காசநோய் இல்லா தமிழ்நாடு - 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, 

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad