முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 December 2024

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (07.12.2024) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 

20 மாற்றுத்திறனாளி களுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், 
மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad