வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திருச்செந்தூரில் இருந்து ஆத்தூர், ஏரல் பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. உமரிக்காடு ஊராட்சி ஆற்றங்கரை தெரு அருகில் இருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெருமழையினால் நதிக்கரையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் ஊருக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார் ஏற்பாடு செய்து உடனிருந்து பார்வையிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment