வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு பழுதடைந்த ஆத்தூர் பாலத்தை சீரமைக்க வேண்டும் தேமுதிக மாவட்ட செயலாளர் வலியுறுத்தல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 December 2024

வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு பழுதடைந்த ஆத்தூர் பாலத்தை சீரமைக்க வேண்டும் தேமுதிக மாவட்ட செயலாளர் வலியுறுத்தல்.

வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு பழுதடைந்த ஆத்தூர் பாலத்தை சீரமைக்க வேண்டும் தேமுதிக மாவட்ட செயலாளர் வலியுறுத்தல்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சித்திரை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கடந்த ஆண்டு இதேபோல தற்போதும் மழை பெய்து ஸ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ளது. ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள அண்ணாநகர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக அங்கு ஒரு பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஏரல் ஆற்று பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருச்செந்தூர் தொகுதியில் உள்ள ஆத்தூர் பாலம் பழுதடைந்து ஓர் ஆண்டு ஆகிறது. இன்று வரை அது சரி செய்யப்படவில்லை. இரண்டு பகுதிகளிலும் தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த மெத்தன போக்கை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கோரிக்கை களை நிறைவேற்றா விடில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்நூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad