திருச்செந்தூர் வட்டம் குதிரை மொழி ஊராட்சி தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு பூஜை அதனைத் தொடர்ந்து தேனி கருப்பையா நாடார் பத்மாவதி ஆகியோரின் நினைவாக 37 வது ஆண்டு விழாவையொட்டி 1500 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவிளக்கு பூஜையில் 1500 பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதில் கலந்துவிட்ட பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு 9 மணிக்கு உற்சவர் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று மாலை 3.45 மணிக்கு கள்ளர் வெட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் காந்திமதி செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment