விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 December 2024

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு.

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (27.12.2024) விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் ஆகியவற்றில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, மாசார்பட்டி காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், முகாம் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும் மேற்படி போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை ( Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி காவல் நிலைய வளாகங்களில் மரக்கன்று நட்டி, வளாகப் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad