டெல்லியில் அவரது உடலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார் கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பரமக்குறிச்சி பஜாரில் மன்மோகன் சிங் படத்திற்கு மரியாதை செய்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், தகவல் தொழில்நுட்ப அணி பாபுஜி ,கிளைச் செயலாளர்கள் பூங்குமார்,கிதியோன், ரவி ,விஜி, பேச்சிமுத்து, ஆதிதிராவிடர் நல அணி பொன்னு லிங்கம், சிறுபான்மையினர் அணி சலீம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொண்ணு, மாயாண்டி தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment