கூட்டாம்புளி அன்பு உள்ளத்தில் முதியோர் கட்டிடம் திறப்பு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 December 2024

கூட்டாம்புளி அன்பு உள்ளத்தில் முதியோர் கட்டிடம் திறப்பு விழா.

கூட்டாம்புளி அன்பு உள்ளத்தில் முதியோர் கட்டிடம் திறப்பு விழா
 
கூட்டாம்புளியில் இயங்கி வரும் ஆதரவு அற்ற மற்றும் மன நல பாதிக்கபட்ட மக்களின் வசிப்பிடமாக பல வருடமாக திகள்கிறது. 

இதில் புதிதாக முதியோர் தங்கும் விடுதியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் நலம் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். 

இதில் சங்கு குளி தலைவர் இசக்கி முத்து, சுரண்டை கோமதி தங்கமாளிகை பழனிசாமி, சென்னை ராமகிருஷ்ணன் பட்டாபிராமன், அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்பிரியல் தொழில் அதிபர் பொன் வேல், ராணி தேவதாஸ், மரம் வரம் நிர்வாக இயக்குநர் ராமன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை அன்பு உள்ளத்தின் நிர்வாகிகள் திருமதி விஜயா, திருமதி தீபா மற்றும் ஊழியர்கள் இவ்விழாவினை சிறப்பித்தனர் 
#தூத்துக்குடி #ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad