கோவில்பட்டி கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 19 December 2024

கோவில்பட்டி கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு.

கோவில்பட்டி  கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

ரோட்டரி சங்கத்தின் மூலம் கல்லூரி மாணவர்களிடையே தலைமை பண்பு,சேவை மனப்பான்மையை வளர்த்திட கல்லூரி தோறும் ரோட்ராக்ட் சங்கங்களை உருவாக்கி வருகிறது.

கோவில்பட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கதலைவர் தாமோதரக் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணன், கோவில்பட்டி ரோட்டரி சங்க ரோட்ராக்ட் சேர்மன் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி ரோட்ராக்ட் சங்க தலைவராக ஜவஹர், செயலாளராக சோனிகா, பொருளாளராக அரவிந்த் உள்பட 20 புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ரோட்ராக்ட் சேர்மன் பேராசிரியர் அருணேஷ்,உதவி ஆளுநர் புளோரா நெல்சன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் வி.எஸ்.பாபு, சீனிவாசன், நாராயணசாமி, ஆசியா பார்ம்ஸ் பாபு,கல்லூரி பொருளாளர் எஸ்.எம்.கண்ணன், உறுப்பினர் அருண், கம்பன் கழக செயலாளர் சரவணச்செல்வன், உள்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜய கோபாலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad