திருச்செந்தூர் பகுதியில் செல்போன் காணாமல் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் புகார் மனு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன செல்போன்களில் 11 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டனர்.
மேற்படி மீட்கப்பட்ட 11 செல்போன்களை இன்று (19.12.2024) திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
No comments:
Post a Comment