தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் உள்ள பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் மர விழா நடைபெற்றது. ரூபன் ஆரம்ப ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். ரெக்ஸ் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து அலை அலையா என்ற பாடலுக்கு மாணவிகள் நடனம் ஆடினர். செலினா ஜான்சி வேத பாடம் வாசித்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் நடனம் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜெனிபர், ரஞ்சித் வயோலா வேதபாடம் வாசிக்க ரூபன் கிறிஸ்து பிறப்பு செய்தி வழங்கினார்.
ஜெபர்சன் கொட்டும் பனி என்ற பாடல் பாடினார். விழாவில் கிறிஸ்மஸ் தாத்தா நடனமாடி இனிப்பு வழங்கியும் மகிழ்வித்தார். ஆசிரியர்கள் விண்ணில் வேந்தன் மண்ணில் என்ற பாடலை பாடினர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூ நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment