டிச. 13.நவதிருப்பதி கோவில்களில் முதன்மையான கோயில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில். ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி வைணவர்களுக்கு மிக முக்கியமானது.
திருக்குறுங்குடி நம்பி கோவில் அருகேயுள்ள தட்சிண பர்வத மலையில் வசித்து வந்த நம்பாடுவான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்.
தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் வீணையுடன் சென்று நம்பி கோவில் முன் நின்று பெருமாள் தாயாரை பண்ணிசைத்து பக்தியுடன் பாடுவார்.. கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி விரதம் இருந்து துவாதசி காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செல்லும்போது ஒரு அரக்கன் வழிமறித்து அவன் உடல் மாமிசம் நிற்பதற்கு கேட்டான். நம்பாடுவான் ஏகாதசி விரதம் முடித்து பெருமாளை தரிசனம் செய்து வருவதாகக் கூறினார்.
அரக்கன் சம்மதிக்கவில்லை. நம்பாடுவான் தான் சொன்னபடியே வராத இருந்தால் சில பாவ காரியங்களை சொல்லி அதன் பலன் அடைவேன் என சத்தியம் செய்தான். பின்பு அரக்கன் சம்மதித்தார். நம்பாடுவான் விரதம் முடித்து வந்தான். அரக்கன் மகிழ்ச்சி அடைந்து உன்னை உண்பதை விட நீ பெருமாளிடம் பெற்ற உன் பலனைத் தந்து எனக்கு சாபவிமோசனம் தீர்க்க கேட்டான்.
பின்னர் சாபவிமோசனம் பெற்றான். இதனை முன்னிட்டு காலையில் 7.00 மணிக்கு விஸ்வரூபம் 8.15 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார்.திருவாராதனம் முடிந்து பின்னர் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி மேற்படி கைசிக புராணம் படித்து இதனை படித்தவர்க்கும் கேட்டவர்க்கும் பலன் கிடைக்கும்.
என்பதை வராகப்பெருமாள் தாயாரிடம் சொன்னதை ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான் முன்பு படித்தார். இதற்காக ஏற்பாடுகள் அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு. அனந்த பத்மநாபன். சீனு நாராயணன் ஆகியோர் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன். தேவராஜன். திருவேங்கடத்தான்.
கண்ணன். வேங்கட கிருஷ்ணன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன். அத்யாபகர்கள் சீனிவாசன் சீனிவாச தாத்தம் பார்த்தசாரதி. உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment